மீனின் மருத்துவப் பயன்கள்
ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நன்மை தரக்கூடியது. மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
- மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.
- மீன் சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வராது. அதிலும் குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வராது.
- மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
- மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது. மீனில் உள்ள “ஒமேகா 3” ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது.
- மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
- மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
- பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், “ஒமேகா 3 ” யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.
- கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன்.
- பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் பயன்படுகிறது.
- மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும், கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன.
- சருமத்திற்க்கு பாதுகாப்பளித்து, இரத்தவோட்டத்தைத் தூண்டி செயல்படும் விட்டமின் நு மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.
- தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.
தொகுப்பு: “வசந்தம் செய்திகள்” மற்றும் ACMC இணையதளம்
மீன் மருத்துவப் பயன்கள்


