Jumaana Syed Ali

மகளின் பிரிவு

ரம்மியமான பயணம்

உன்பிஞ்சுக் கரங்களால்கைப் பிடித்துநீஅழைத்துசெல்லும்சிறு தூரமும்ரம்மியமானநெடுந்தூரபயணங்கள்ஆகி விடுகின்றனஎன் வாழ்க்கையில்!மகள்!! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

மண்ணறை

மண்ணறையில்கடைசியாகதுணி விலக்கிஉன் முகம்பார்த்துமூடிய பின்னர்இருண்டுபோனதுஎன் மொத்தஉலகமும்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

பாரம்

உன்னைகடைசியாகதூக்கிச் சுமந்ததோள்களில் இன்னமும்குறையாமல்இருக்கிறதுபாரம் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

உன் தொட்டில் ஞாபகங்கள்

நீகடைசியாகதூங்கியதொட்டிலில்உன்ஞாபகங்கள்மட்டும்இன்னமும்சிணுங்கிக்கொண்டிருக்கிறது! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

கடைசிப் பார்வை

கண் சொருகிமேலெழும்பிநீ எனைபார்த்தஅந்த கடைசிப்பார்வையில் தான்என் உலகம்மொத்தமும்இன்னமும்நிலைகுத்திநிற்கின்றது !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

Scroll to top