Jumaana Syed Ali

tamil poems

பார்வைகள்

என்னைப் பார்ப்பாயாஎன்றுஎத்தனை முறைஏங்கியிருப்பேன்என்னெதிரேநீ வரும்பொழுது!ஆனால்அத்தனை முறையும்நீ என்னைதிரும்பிப்பார்த்ததில்லையேஎன் மனம்எப்பொழுதுமேஉன் பக்கம்திரும்பியிருந்தும்! ‘ஜுமானா’ சையத் அலி

ரம்மியமான பயணம்

உன்பிஞ்சுக் கரங்களால்கைப் பிடித்துநீஅழைத்துசெல்லும்சிறு தூரமும்ரம்மியமானநெடுந்தூரபயணங்கள்ஆகி விடுகின்றனஎன் வாழ்க்கையில்!மகள்!! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

மாறும் திசை

காற்றின்வேகத்திற்குஏற்றார் போல்திசை மாறும்விசைப் படகினைப்போல்என்னைதிசை மாறச்செய்கின்றனஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி

கடல் அலைகள்

கடல் அலைகள்துள்ளிக் குதித்துஆர்ப்பரித்துவந்தாலும்கரையைஅணைத்துக்கொள்வதில்லை!வருடி விட்டுத்தான் செல்கின்றனஅது போலத் தான்உன்நினைவுகளும்! ‘ஜுமானா’ சையத் அலி

புலம்பெயர் தொழிலாளர்கள்

அரை வயிறும்வெறும் தண்ணீரும்பசியும்பட்டினியுமாய்நடந்துஊர் சென்றுசேரும் போதுபுலம் பெயர்ந்துபோயிருக்கும்அவனின்எதிர்கால கனவுகளும்மொத்த வாழ்க்கையும் !! புலம்பெயர் தொழிலாளர்கள் ! ‘ஜுமானா’ சையத் அலி

Scroll to top