மிடுக்கான
உடையிலும்
செருக்கான
நடையிலும்
உன்
வாழ்க்கை
அமைந்ததின்
பின்னால்
அழுக்கு வேஷ்டி
சட்டையோடும்
வார் அறுந்து போன
ரப்பர் செருப்போடும்
ஒவ்வொரு நாளும்
ரத்தம் சிந்திய
தகப்பனின்
தியாகங்கள்
அத்தனையும்
எந்த சலனமும்
இல்லாமல்
மௌனமாக
ஒளிந்து
கொண்டிருக்கிறது !!
‘ஜுமானா’ சையத் அலி
தேவதைகளின் தகப்பன்
தகப்பனின் தியாகங்கள்



