தொலை தூரங்கள்
தொலைதூரங்கள்ஒரு போதும்பிரித்ததில்லைஉன்னையம்என்னையும்!எப்போதும்நெருக்கத்தில்தான் இருக்கிறாய்நீங்காதநினைவுகளாய்!

தொலைதூரங்கள்ஒரு போதும்பிரித்ததில்லைஉன்னையம்என்னையும்!எப்போதும்நெருக்கத்தில்தான் இருக்கிறாய்நீங்காதநினைவுகளாய்!
தூங்கி எழுந்ததும்முதல் வேலையாகஓடி வந்துஎன்னைகட்டி அணைத்துக்கொள்கிறாய்! தூக்கம் இல்லாமல்போன என்கடந்த காலகருப்பு இரவுகள்அனைத்தையும்வெளிச்சமாக்கிவிட்டுப் போகிறாய்உன் ஒற்றைஅரவணைப்பில் !!
மிடுக்கானஉடையிலும்செருக்கானநடையிலும்உன்வாழ்க்கைஅமைந்ததின்பின்னால்அழுக்கு வேஷ்டிசட்டையோடும்வார் அறுந்து போனரப்பர் செருப்போடும்ஒவ்வொரு நாளும்ரத்தம் சிந்தியதகப்பனின்தியாகங்கள்அத்தனையும்எந்த சலனமும்இல்லாமல்மௌனமாகஒளிந்துகொண்டிருக்கிறது !!
கனவுகளில்மட்டுமேகோட்டைகளைகட்டிப் பார்த்தவனுக்குஓர் இரவில்மகாராணியாய்வந்து பிறந்தாய் !மறுநாள்விடிந்த பொழுதுஅரண்மனையாகஉருமாறிப் போயிருந்ததுஎன் சிறு உலகம் !!
நீநடந்து போனபாதைகள்எல்லாம்எதுவும் நடக்காததுபோல்கள்ள மௌனம்சாதிக்கின்றன ! நெஞ்சம்முழுவதும்பேரிரைச்சலோடுஅங்கும் இங்கும்திக்குத் தெரியாமல்இன்னமும்சுற்றிக்கொண்டிருக்கிறதுஉன் நினைவுகள் !!